உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றம்: கனிமொழி எம்பி

தமிழகத்தில் உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.;

Update: 2023-11-16 08:28 GMT

கனிமொழி எம்.பி  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உப்பளத் தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 5வது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் மாநில  செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் நகர ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வி வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் கீதா ராமகிருஷ்ணன், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் லீலாவதி, மாநில செயலாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இம்மாநாட்டில் உப்பளங்களின் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், உப்பள நிலவளம் சார்ந்த உரிமைகள் உப்பளத் தொழிலாளர்களுக்கு கிடைக்கவும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளுக்கு முன்வைக்கப்பட்டது. மழைகால நிவாரண அனைத்து உப்பள தொழிலாளர்களுக்கு வழங்க கோரியும், உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பது உள்ளிட்ட முறையான முழுமையான பொருளாதார கூட்டமைப்புடன் உடனடியாக நடைமுறையில் கொண்டு வர தமிழக அரசு ஆவன செய்ய கோரியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாநாட்டில் பேசிய கனிமொழி எம்பி, தமிழகத்தில் உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News