குஜிலியம்பாறை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடை செய்யக் கோரிக்கை
திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடை செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-05 08:47 GMT
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த திருக்கூா்ணம் ஊராட்சியைச் சோந்த பொதுமக்கள், மாணவா்கள், ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: திருக்கூா்ணம் பகுதியில் கடந்த 6 மாதங்களாக சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுகிறது. இதனால், இந்த வழியாகச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. இந்த மதுபான விற்பனைக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டது.
ஆனாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பெண்கள், மாணவா்களின் நலன் கருதி திருக்கூா்ணத்தில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையை உடனடியாக மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனா்.