யானைகளை வனப்பகுதிக்குள் விர‌ட்ட‌ கோரிக்கை

கொடைக்கானல் மங்க‌ள‌ம்கொம்பு இந்திராந‌க‌ர் குடியிருப்பு ப‌குதியில் இர‌வில் உலா வ‌ரும் காட்டுயானைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-14 02:34 GMT

கொடைக்கானல் மங்க‌ள‌ம்கொம்பு இந்திராந‌க‌ர் குடியிருப்பு ப‌குதியில் இர‌வில் உலா வ‌ரும் காட்டுயானைகளை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் கீழ்ம‌லைகிராம‌ங்களான‌ தாண்டிக்குடி, மங்க‌ள‌ங்கொம்பு, பெரும்பாறை உள்ளிட்ட‌ ப‌ல்வேறுப்ப‌குதிக‌ளில் உள்ள‌ விளைநிலங்களிலும், வனப்பகுதியை ஒட்டிய புதர்பகுதிகளிலும் காட்டு யானைக‌ள் முகாமிட்டு நாள் தோறும் வாழை, பலா  உள்ளிட்ட விவசாய பயிர்களையும், விளைநிலங்களையும் சேதப்படுத்தி வ‌ந்த‌ நிலையில் நேற்று ந‌ள்ளிர‌வு வேளையில் ம‌ங்க‌ள‌ங்கொம்பு இந்திராந‌க‌ர் குடியிருப்புப்ப‌குதியில் மூன்றிற்கும் மேற்ப‌ட்ட‌ காட்டுயானைக‌ள் உலாவ‌ந்த‌தால் இப்ப‌குதி குடியிருப்புவாசிக‌ள் அச்ச‌ம‌டைந்துள்ள‌ன‌ர், மேலும் காட்டு யானைக‌ள் கூட்ட‌ம் இந்த‌ப்ப‌குதிக‌ளிலேயே நீண்ட‌ நேர‌ம் இருந்த‌தால் இப்ப‌குதியின‌ர் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர், காட்டு யானைக‌ளால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்படும் முன்னே வனத்துறையினர் நிரந்தரமாக காட்டுயானை கூட்ட‌த்தினை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என இப்ப‌குதியின‌ர் கோரிக்கை விடுத்துள்ள‌தும் குறிப்பிட‌த்த‌க்கது.
Tags:    

Similar News