சட்டசபையில் ஜனநாயகம் செத்துவிட்டது. - ஆர் பி உதயக்குமார்.

சட்டசபையில் ஜனநாயகம் செத்துவிட்டது. சட்டசபையில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கபட்டுள்ளது. திமுகவின் தலைவிதியை மக்கள் விரைவில் எழுதுவார்கள் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயக்குமார் பேசினார்.

Update: 2024-06-28 05:48 GMT
அதிமுக சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், ஆட்சி, அதிகாரம், காவல் துறை அரசின் கையில் இல்லை. முதல்வர் இன்னும் கள்ளகுறிச்சிக்கு செல்லாதது ஏன்? முதல்வர் கள்ளக்குறிச்சியில் கால் வைத்தால் அங்கு கன்னி வெடியாகத்தான் இருக்கும். நெஞ்சுரமுள்ள முதல்வராக இருந்தால் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா? சட்டசபையில் ஜனநாயகம் செத்துவிட்டது. சட்டசபையில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கபட்டுள்ளது. திமுகவின் தலைவிதியை மக்கள் விரைவில் எழுதுவார்கள். ஸ்டாலின் வீட்டுக்கு சென்று எடப்பாடியார் கோட்டைக்கு சென்றால் தான் அனைத்தும் சரியாகும் என்று பேசினார்.
Tags:    

Similar News