உச்சநீதிமன்ற உத்தரவின்படி 19 கடைகள் இடிப்பு
பழனியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 19 கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று இடித்து அகற்றும் பணி தொடங்கியது.;
Update: 2024-03-01 08:54 GMT
பழனியில் கடைகள் இடிப்பு
பழனியில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 19 கடைகளை உச்சநீதிமன்ற உத்தரவின்படி நேற்று இடித்து அகற்றும் பணி தொடங்கியது. பாளையம் விநாயகர் கோயில் முன்பு இருந்த நான்கு கடைகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மின் வாரிய அதிகாரிகள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டன. எஞ்சியகடைகள் வரும் நாட்களில் தொடர்ந்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.