விருத்தாசலம் பகுதியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டியலின மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க தவறிய அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-02 01:27 GMT
கண்டன ஆர்பாட்டம்
பல்லாவரத்தில், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அ.இ.அண்ணா தி.மு.கழகம் சார்பில் விருத்தாசலம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.