சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருவேற்காடு நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை நகராட்சியில் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடையில் மயிலாடுதுறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தார்.
இந்த தகவலை அறிந்த கடையின் உரிமையாளர் உட்பட 10.க்கு மேற்பட்டோர் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைகளை பறித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தத் தள்ளுமுள்ளும்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் பிருந்தா தாக்கப்பட்டு காயமடைந்தார்.
மேலும் கடை உரிமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டி பிரச்சனை செய்ததால் இந்த சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் நகராட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிக்கையின் படி குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை உபயோகம் செய்த கடைக்கு சீல் வைக்கப்படவில்லை என்பதை கண்டித்து தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் துப்புரவு அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு நகராட்சி அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.