பத்திரிக்கையாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பல்லடத்தில் செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-28 03:43 GMT
 ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதி நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.   மேலும் இந்த தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் பத்திரிக்கையாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது.  இதனொரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே, நியூஸ் 7 செய்தியாளர் முகமது நலீம் ஒருங்கிணைப்பில், அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, பத்திரிகையாளர்களுக்கு முழு பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளருக்கு உயர்சிகிச்சை, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
Tags:    

Similar News