அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.;
Update: 2024-06-24 11:49 GMT
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விசுவநாதன் உள்ளிட்ட அதிமுக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.