கோவை மாநகர அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான தி.மு.க அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மாநகர் மாவட்டம்,புறநகர் மாவட்டம்,புற நகர் வடக்கு மாவட்டம் சார்பில் தனித்தனியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது பட்டியல் இன மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.