இஸ்ரேலை கண்டித்து தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செய்யாறில் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் அரசை கண்டித்து தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைவர் கமால் தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் அரசை கண்டித்து தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைவர் கமால் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பாரூக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், அப்போது அவர் பேசியதாவது, இஸ்ரேல் என்கிற ஒரு நாடு உலக வரைபடத்தில் 1947 க்கு முன்பாக இல்லவே இல்லை.
உலகத்தை கண்காணிக்க கூடிய ஐநா சபையின் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்காவும் பாலஸ்தீனத்தில் காசா பகுதியை பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை கொடூரமாக கொன்று குவிக்கிறது காந்தி எழுதிய பத்திரிக்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே எழுதியுள்ளார் ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்திற்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கிறது கடந்த 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு இருக்கிறார்கள்
\ஆனால் 2014க்கு பிறகு இந்திய ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு ஆதரவளித்து அவர்கள் பயன்படுத்தும் பிரகாசஸ் என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவில் புகுத்தி இந்தியாவில் உள்ள மற்ற கட்சியினரின் செல்போன்களை உலவு பார்த்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் எனவே மீண்டும் இந்திய ஒன்றிய அரசு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என பேசினார்.முடிவில் இஸ்ரேல் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கோஷமிட்டனர்.
பின்னர் இஸ்ரேல் கொடியை எரிக்க முயற்சித்தனர் , முன்னதாகவே கண்காணித்தபோலீசார் கொடியை பிடுங்கி எரிப்பதை தடுத்து நிறுத்தினர். பாலஸ்தீனத்தை இந்தியா ஆதரிக்க கோரிக்கை முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட தலைவர் எச்.ஜமால் மாவட்ட செயலாளர் நசீர் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் ரஹீம் பாஷா மாவட்ட பொருளாளர் யூனிஸ் பாஷா மற்றும் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மேலும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் விசிக,சிபிஎம் கட்சியினர் கண்டனங்களை பதிவு செய்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட தமுமுகவினரும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.