கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிவகாசியில் புதிய தமிழகம் கட்சி சார்பாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
Update: 2024-06-26 12:33 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்தும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், புதிய தமிழகம் கட்சி விருதுநகர் மத்திய மாவட்ட சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் அய்யாச்சாமி தலைமை வகித்தார்.சிவகாசி கிழக்கு மாநகர செயலாளர், சிவகாசி மேற்கு மாநகர செயலாளர் சிவகாசி ஒன்றிய செயலாளர் ,வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாரிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டரணி, நகர,ஒன்றிய ஆண், பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்