மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையின் முன்பு மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடந்தது.
மக்கள் விரோத தொழிலாளர் விரோதவிவசாயிகள் விரோத போக்கை கடைபிடிக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையின் முன்புஏ ஐ டி யு சி, சி ஐ டி யு , எல் பி எஃப், ஹெச் எம் எஸ், மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் தொழிலாளர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மறியல் போராட்டம் மேற்கு ரதவீதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையின் முன் நடைபெற்றது முன்னதாக பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் விவசாய விரோத போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெயராமன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் முத்துசாமி, சிஐடியு மாவட்ட குழு ராயப்பன், எச் எம் எஸ் மாவட்ட குழு அலமேலு, ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் செங்கோடன், ஏ ஐ டி யு சி மாவட்ட குழு சுகுமார், தொமுச மாவட்ட துணை தலைவர் ராமலிங்கம், எஸ் எம் எஸ் மாவட்ட குழு கவிதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் தொமுச மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, எஐடியுசி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், எஸ் எம் எஸ் மாவட்ட குழு விஜயா, சி ஐ டி யு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அகில இந்திய விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்புமணி. எச் எம் எஸ் மாவட்ட துணைச் செயலாளர் சோமசுந்தரம், உள்ளிட்ட 30 பெண்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது நிறுவனங்களான வங்கி, ரயில்வே, எல்ஐசி , போன்றவற்றை தனியாருக்கு கொடுக்க கூடாது, மின்சார வாரியத்தை உற்பத்தி, பகிர்மானம், வசூல் என மூன்று பகுதிகளாக பிரிக்கும் மின்சார மசோதாவை கைவிட வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு திருச்செங்கோடு கொங்கு வேளாளர் சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டனர். திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.