ராகுல்காந்தி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அசாம் மாநில அரசின் தூண்டுதலின் பேரில் ராகுல்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-24 04:16 GMT
ஆர்ப்பாட்டம் 

இந்திய ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மீது அசாம் மாநில அரசு தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், பிரசித்தி பெற்ற சங்கர் தேவ் ஜஸ்மஸ்தான் கோவிலுக்குள் வழிபட சென்ற ராகுல்காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் மீதான தாக்குதலை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலத்தில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.ஆர்.பி.பாஸ்கர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக பிரிவு தலைவர் சுப்பிரமணி, எஸ்.சி, எஸ்.டி.பிரிவு மாநில துணைத்தலைவர் விஜய் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் பிரபு, மாவட்ட துணைத்தலைவர் மொட்டையாண்டி, விவசாய அணி மாவட்ட தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் சஞ்சய்காந்தி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பர்வேஷ், துணைத்தலைவர் அலாவுதீன் பாஷா, ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் முகமதுஅலி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News