பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-12 08:28 GMT

 ஆர்ப்பாட்டம்

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளார். கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பாக பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை ஆர் எஸ் தேவா, கடலூர் மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட பொது செயலாளர் கார்த்தி , மாவட்ட செயலாளர் ஜம்புலிங்கம், மாவட்ட அமைப்பு பொது செயலாளர் பாலச்சந்தர், மாவட்ட இளைஞரணி பொருளாளர் லட்சுமணன், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் கண்மணி, பண்ருட்டி நகர செயலாளர் பாபு பண்ருட்டி ஒன்றிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.
Tags:    

Similar News