ராமநாதபுரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் இலங்கை அரசு மற்றும் மத்திய அரசையும் கண்டித்து திமுக சார்பில் மாநிலத் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-11 15:21 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்

ராமநாதபுரம் ராமேஸ்வரம் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக மீனவர்கள் சிறை பிடிப்பதும் மற்றும் சிறைப்பிடித்த படகுகளை அரசுடமையாக்குவதும் தொடர்ச்சியாக மீனவர்கள் தாக்கப்படுவது இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதை கண்டித்தும்,

இலங்கை கடற்படையாள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் சிறைபிடித்து இலங்கை வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை விடுவிக்க கோரி திமுக சார்பில் மாநிலத் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலைய எதிர்ப்புறம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி தலைமை தாங்கினார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட திமுக கழகச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் நகர செயலாளர் நாசர் கான் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக கட்சியினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 64 மீனவ குடும்பங்களுக்கு திமுக கட்சி சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News