ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-24 12:15 GMT
கோப்பு படம்
திண்டுக்கலில் சத்துணவு கூடங்களில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் உள்ள இரவு காவலர்கள், அலுவலக உதவியாளர் பணியிடங்களில் 50 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் அருண் பிரசாத் தலைமை வகித்தார். வட்டார தலைவர் சிவசக்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார்.