ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளகுறிச்சியில் ஊரகவளர்ச்சிதுறை அலுவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;
Update: 2024-01-06 11:58 GMT
ஆர்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு கண்டன உரையாற்றினார். பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் ஜார்ஜ்வாஷிங்டன், நாராயணசாமி, குமார், ஆனந்தகிருஷ்ணன், ஆரோக்கியசாமி, ஆரோக்கியதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.