திருப்பூரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2024-02-23 06:45 GMT
திருப்பூரில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • whatsapp icon
திருப்பூரில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்தின் முன்னோட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கமலஹாசன் தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படத்தின் டீசரில் காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதி போல சித்தரித்துள்ளதாக கூறியும் மேலும் இந்த படத்தைதமிழக அரசு தடை செய்ய வேண்டுமென  கூறியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் திருப்பூர் சி டி சி கார்னர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அமரன் படத்தைதமிழக அரசு தடை செய்ய வேண்டும் எனக் கூறி கையில் பதாகைகள் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News