ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-02 02:29 GMT

ஆர்ப்பாட்டம் 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் அமுதஅரசன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.மாநில செயல்கள் உறுப்பினர் பாலாஜி நன்றி உரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலைஞரின் கனவு இல்லாத திட்டத்திற்கு உரிய பணியிடங்கள் வழங்கிட வேண்டும் பயனாளிகள் தேர்வு தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் போதிய காளவசம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் இந்த ஆண்டு கலைஞர் கனவு இல்லத் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் கிராமப்புற பகுதியில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது அதற்கான பூர்வாங்க பணிகள் தமிழக முழுவதும் துவங்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் இத்திட்டம் கொண்டுவதற்கு மிகப்பெரிய பணி இதற்கு உரிய ஊழியர்கள் கட்டமைப்பு ஏற்படுத்த வட்டார மாவட்ட அளவில் ஏற்படுத்தி இத்திட்டத்திற்கு என கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தோம். இத்திட்டத்தை செயல்படுத்த உரிய கால அவசரம் வேண்டும் வேலை உத்தர வாய்ப்பு தர வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முதல் ஊராட்சி செயலர் வரை ஒட்டுமொத்த துறைக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

15 ஆண்களுக்கு முன்பு கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளின் கிராமப்புற பகுதிகளில் உள்ள குடிசைகளை நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் உரிய கால அவகாசம் வேண்டும். இத்திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமனம் வழங்காமல் இத்திட்டத்திற்கான வீடுகள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு  முழுவதும் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாமல் உள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித் துறை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News