பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-02-21 05:07 GMT
ஆர்ப்பாட்டம்
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பார்வையற்றோர் நல்லெண்ண சங்க சேலம் மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமை தாங்கினார். வேலையில் இல்லாதோருக்கான உதவி தொகையை ரூ.1,000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.