வழிபாட்டுதலங்களை பாதுகாக்கக்கோரி த.மு.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-07 08:29 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும், அனைத்து வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் சையத்உஸ்மான் தொகுப்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது ஹூஸைன் மன்பா, மாநில செயலாளர் முஸ்தாக்தீன், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மனிதநேய வர்த்தக சங்க மாநில பொருளாளர் அப் துல்ஹக்கீம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரி ராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயலாளர்கள் பஜிலுதீன், கலிலூர்ரகுமான், அர்ஷத், பொருளாளர்கள் ரியாசு தீன், அலாவுதீன், மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் அஷ்ரப் அலி நன்றி கூறினார்.