கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-01-06 01:01 GMT

சங்ககிரியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

சேலம் மாவட்டம், சங்ககிரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிரதிநிதி முருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஜிட்டல் பயிர் ஆய்வு பணிகளை தொடங்குவது குறித்தும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிர்வாகிகள் சதீஸ்பிரபு, உஷாபிரியா, ராஜலிங்கம், சண்முகம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News