சுகாதார சீர்கேட்டை கண்டித்து 'மாஸ்க்' அணிந்து ஆர்ப்பாட்டம் !

தும்பவனம் சோணாசலம் தெருவாசிகள், ராஜாஜி மார்க்கெட் அருகே மாஸ்க் அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-07-03 05:14 GMT

ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 20வது வார்டில், ராஜாஜி மார்க்கெட் அமைந்துள்ளது. இதன் அருகேயுள்ள புதுத்தெரு சந்திப்பில், காய்கறிகழிவு, டாஸ்மாக் குப்பை, மது பாட்டில்கள் கொட்டி துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் மதுபிரியர்கள், புதுத்தெரு சந்திப்பிலேயே விழுந்து கிடப்பதும் உண்டு. சேறும் சகதியுமாக எப்போதும் காட்சியளிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதியினர் தொடர்ந்து புகார்தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தும்பவனம் சோணாசலம் தெருவாசிகள், ராஜாஜி மார்க்கெட் அருகே மாஸ்க் அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சுகாதார சீர்கேட்டை மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லைஎன புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். விஷ்ணு காஞ்சி போலீசார் சமாதான பேச்சு நடத்தினர்.

இருப்பினும், மாநகராட்சி கமிஷனர் நேரில்வர வேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் கூறினர். கமிஷனர் வராததால், ரயில்வே ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அதையடுத்து, போராட்டம் நடத்திய, 30 பேரையும் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags:    

Similar News