கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி விருதுநகரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் சாவுகளை தடுத்திட கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய அண்டை மாநிலங்கள் போல தமிழ்நாட்டிலும் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி விருதுநகரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் வளாகம் அருகே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் சாவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் கள் இறக்க அனுமதி கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் கடைகளை மூடக்கோரியும் தமிழர்களின் இயற்கை பானமான தென்னை, பனை, கள் இறக்குமதி விற்பனைக்கு அனுமதி வழங்க கோரி கண்டன முழக்கங்களை கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.