அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

க. பரமத்தியில் அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2024-01-12 04:39 GMT
கரூர் மாவட்டம் க. பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி சார்பில், க. பரமத்தி வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வகண்ணன் தலைமையில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, அரசாணை எண் 243 ரத்து செய்ய வலியுறுத்தியும், 12 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், இருபால் ஆசிரியர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News