ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இன்று போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர் ஆனால் 99% பேருந்துகள் வழக்கம் போல் எந்தவிதமான இடையூறும் இன்றி ஓடி வருகின்றன, தங்களது போராட்டம் குறித்து அரசுக்கு தெரிவிக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து பணியாளர்கள் சமேளனத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார் பதினைந்தாவது ஊதிய குழு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு ஆணைப்படி கொடுக்க வேண்டிய நான்கு மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது,இந்த போராட்டத்தில் 60க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்