நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  !

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஊராட்சிக்குட்பட்ட ஏற்றகோடு அணஞ்சான்விளையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

Update: 2024-06-14 04:36 GMT

ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் ஊராட்சிக்குட்பட்ட ஏற்றகோடு அணஞ்சான்விளையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த அலுமினிய தொழிற்சாலை அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருவதாகவும், ஆலையில் இருந்து வெளிவரும் நச்சு கழிவு மட்டும் நச்சு வாய்வால் ஆஸ்துமா மூச்சு திணறல் கண் எரிச்சல் போன்ற நோய்களால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அலுமினிய தொழிற்சாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பி உள்ளனர் ஆனால் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அலுமினிய பாத்திர ஆலை மற்றும் அலுமினிய பாத்திரங்களுக்கு ஆஸிட் ஏற்றும் தொழிற்சாலையை மூட வலியுறுத்தியும், இதற்காக மனு கொடுத்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News