திருச்சியில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

திமுக சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினரால் பட்டியலின மாணவி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-01 15:23 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் பெட்டவாய்த்தலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் திமுக எம்.எல்.ஏ. மகன் வீட்டில் வேலைக்கார சிறுமி கொடுமைப்படுத்தப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இன்று தமிழ்நாடு முழுவதும மாவட்ட தலைநகரங்களில் அதிமுகக நடத்தி்யது.

ஆர்பாட்டத்தில் பேசிய பரஞ்சோதி, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அற்ற சூழ்நிலையையும் பட்டியலின மக்களை தொடர்ந்து ஏளனமாக பேசிவரும் திமுக அரசு மற்றும் பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை.

அதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News