மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்கள் பயன்பாட்டில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-31 10:57 GMT

சாலையை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஏற்காடு பழங்குடி மக்கள் பயன்பாட்டில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடி மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் மாரமங்கலம் ஊராட்சியில் 18 கிராம மலைவாழ் மக்கள் பயன்பாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஆறாம் நம்பர் சாலையிலிருந்து கொட்டச்சேடு வழியாக மோனங்குழி காடு வரை கரடு முரடான மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.  அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மழைக்காலங்களில் மண் சாலை பழுதடைந்து மலை கிராம மக்கள் வெளியே வர சிரமம் பட்டு வருகின்றனர். இச்சூழலில் சாலை அமைக்க போராட்டம் நடத்திய பிறகு 1995 ஆம் ஆண்டு எஸ்டேட் முதலாளிகளும் ஊர் பொதுமக்களும் ஆறாம் நம்பர் சாலையை பயன்படுத்திட எழுத்துப்பூர்வமாக இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில் தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் எடுத்த முயற்சியின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் ஆறாம் நம்பர் சாலை அமைக்க முடிவு எடுத்தது அதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துரையிடமிருந்து தேவையான தொகையை பெற்றுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.  அதன் பிறகு தற்போது வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஆறாம் நம்பர் சாலை அமைக்க முடியாது எனவும் அதற்கு மாற்றாக யாருக்கும் பயன் இல்லாத ஏழாம் நம்பர் பீல்ட் சாலையை அமைத்துள்ளார். எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக 18 கிராம ஊர் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மாரமங்கலம் பஞ்சாயத்து கிராம சபை கூட்டங்களில் பலமுறை ஏழாம் நம்பர் பீல்ட் சாலைக்கு கண்டனம் தெரிவித்து ஊர் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக ஏழாம் நம்பர் பீல்ட் சாலையை அமைத்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து சேலம் கோட்டை மைதானத்தில் சிஐடி மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் சிஐடியு மாநில தலைவர் ஆ. சவுந்திரராஜன் கண்டன உரையாற்றினார். அவர் பேசும்போது,  மக்களின் நலனுக்காக மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் அரசின் முடிவையும் மக்களின் கருத்தையும் கேட்காமல் செயல்பட்டு வருகின்றனர். இது ஆளும் அரசுக்கு அவ பெயரையே உண்டாக்கும். மேலும் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தாமல் மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுகிறது. ஏற்காடு கொட்டச்சேடு ஆறாம் நம்பர் பீல்ட் சாலை அமைக்க அப்போதைய மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்ட போதிலும் தற்போதைய நிர்வாகம் மக்கள் நலனுக்கு பயன் இல்லாத ஏழாம் நம்பர் சாலையை அமைத்தது சரியான நடவடிக்கை இல்லை எனவும், மக்களின் தேவையை அறிந்து மக்களுக்கான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்த வேண்டும்.  ஆனால் சேலம் மாவட்ட ஆட்சியர் தனியார் முதலாளிக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது. 40 ஆண்டு காலமாக பயன்பாட்டில் இருந்த ஆறாம் நம்பர் மண் சாலையை உடனடியாக தார் சாலையாக மாற்றி தர வேண்டும். தேவை ஏற்பட்டால் இன்னும் பல சாலைகளை அப்பகுதி மக்களுக்கு அமைத்து தர மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் ஏற்காடு கொட்டச்சேடு ஆறாம் நம்பர் பீல்ட் சாலையை அமைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் சிஐடியு தலைமையில் நடத்தப்படும் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.  ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் டி.உதயகுமார், எஸ். கே. தியாகராஜன், ஆர். வெங்கடபதி, பி. பன்னீர்செல்வம், வி.இளங்கோ, பி. விஜயலட்சுமி, எஸ். வசந்தகுமாரி மாரமங்கலம் பஞ்சாயத்து பிரமுகர்கள், குறிப்பாக கொட்டச்சேடு, மோனங்குழி காடு, செந்திட்டு, காளிக்காடு, சுண்டைக்காடு, மலையங்காடு, அரங்கம், சின்னமதூர் பெரிய மதூர், மாவுத்து, குட்டமாத்தி காடு மாரமங்கலம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டு 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News