வேலூரில் தேமுதிகவினர் கண்டன ஆரப்பாட்டம்
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
Update: 2024-06-26 05:26 GMT
ஆர்பாட்டம்
தேமுதிக வேலூர் மாவட்ட செயலாளர்கள் புருஷோத்தமன், பிரதாப் ஆகியோர் தலைமையில் வேலூர் மாநகர் அண்ணா கலையரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில், கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவி விலகவேண்டும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணத்திற்கு நீதி வேண்டும். கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.