கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதியில் கோரிக்கைகளை வலியுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-07 04:12 GMT

ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். செயலாளர் பச்சையப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட கௌரவ தலைவர் பாண்டியன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பூமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். டிஜிட்டல் கிராஃப்ட் சர்வே பணியை தொடங்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முறையற்ற அழுத்தம் கொடுப்பதை கண்டித்தும் எந்தத் துறையினர் தட்டி கழித்தாலும் அந்த பணியை வருவாய்த்துறையினரை செய்ய சொல்வதை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News