கோட்டப் பொறியாளர்களை கண்டித்து 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

கோட்டப் பொறியாளர்களை கண்டித்து சாலை ஆய்வாளர் சங்கத்தினர் 25 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

Update: 2024-06-15 12:06 GMT

கோட்டப் பொறியாளர்களை கண்டித்து சாலை ஆய்வாளர் சங்கத்தினர் 25 ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.


தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் சார்பில், உதவிக் கோட்டப் பொறியாளர்களின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து வரும் ஜூன்.25 ஆம் தேதி மாலைநேர கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட் டம், தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மண்டல பிரதிநிதி கண்ணன் வேலை அறிக்கை வாசித்தார்.

அனைத்து உட்கோட்டங்களிலும் இருந்து பங்கேற்ற சாலை ஆய்வாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.  கூட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச்  செயலாளர் கோதண்டபாணி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தஞ்சை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகில் காலியாக உள்ள திறன்மிகு உதவியாளர் நிலை பணியிடத்தை, திறன்மிகு உதவியாளர் நிலை - 2 ல் முதுநிலை வரிசைப்படி நிலை 1 வழங்க வேண்டும்.

தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலகில் உள்ள திறன் மிகு உதவியாளர் காலிப்பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும் ஊழியர் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் திருவிடைமருதூர் உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலைப் பொறியாளர், பட்டுக்கோட்டை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கை களை வலியுறுத்தி, வருகிற 25.6.2024 அன்று தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம் முன்பு மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது" என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News