திருவாரூரில் எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆர்ப்பாட்டம்
Update: 2023-12-07 07:08 GMT
ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தினை முன்னிட்டு திருவாரூர் ரயில் நிலையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் விலாயத் உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஹஸ்ஸான் ஃபைஜி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.