கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2024-02-23 15:23 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மின்னணு வாக்கு பதிவை ரத்து செய்துவிட்டு மீண்டும் வாக்குச் சீட்டு முறையை ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 23- 02- 2024 காலை 11.00 மணியளவில் கள்ளக்குறிச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை மாவட்ட செயலாளர்கள் இரா. மதியழகன் (தெற்கு), சேர்ந்தநாடு அறிவுக்கரசு (கிழக்கு), கண்டன உரை வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் விடுதலை செழியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றதொகுதி பொறுப்பாளர் தயா. நெப்போலியன், மண்டல செயலாளர் சி.ராஜ்குமார், மண்டல துணைச் செயலாளர் சா. பொன்னிவளவன். மற்றும் மாநில ,மாவட்ட ,ஒன்றிய நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள், முகாம் செயலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர், நகர செயலாளர் இடிமுரசு நன்றியுறை ஆற்றினார்.