காஞ்சிபுரம்: தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சிகள்  தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.;

Update: 2024-05-17 10:53 GMT

டெங்கு விழிப்புணர்வு

தென்கிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து கொண்டு வருகிறது. அதனை தொடந்து காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த டெங்கு பணியாளர்களுக்கு இன்று பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருநீலகண்டர் திருமண மாளிகையில் தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் அருள்நம்பி தலைமையில், துப்புரவு அலுவலர் திரு.கே.சுகவனம் முன்னிலையில் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர்.செந்தில் திட்டத்தின் விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட மலேரிய அலுவலர் தமணிவர்மா திறன் மேம்பாட்டு பயிற்சி டெங்கு பணியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர், இளநிலை பூச்சியியல் வள்ளுநர், மற்றும் டெங்கு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டது. டெங்கு பணியாளர்களுக்கு கொசு ஒழிப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சிவக்குமார் துப்புரவு அலுவலர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News