டெங்கு விழிப்புணர்வு பேரணி

பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-10-30 08:55 GMT

டெங்கு விழிப்புணர்வு பேரணி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கருங்கல் பாலூரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதனை பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தொடங்கி வைத்தார். இப்பேரணியின் சிறப்பு நிகழ்ச்சியாக டெங்கு எதனால் பரவுகிறது? டெங்கு வராமல் இருப்பதற்கு என்னென்ன வழி முறைகளை கையாள வேண்டும்? என்னும் கருப் பொருளில் நோக்கவுரை வழங்கப்பட்டது. அதோடு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் மையச்சிந்தனையை மாணவர்கள் உணர்ந்து டெங்கு ஒழிப்பு பற்றிய பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு விழிப்பு ணர்வு கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வானது மாண வர்கள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வும், தண்ணீரை தேங்கவிடா மல் இருக்கவும், காய்ச்சிய நீரை மட்டுமே பருகவும், சத்தான உணவுகளை உட் கொள்ளவும், கொசுக்கள் பரவாமல் இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடவும், போன்றவற்றை தெளிவு படுத்தும் விதமாகவும், மேலும் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்களை தூண்டும் விதமாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News