டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வார்டாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தைமுன்னிட்டு,திருச்செங்கோடு நகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சுகாதார அதிகாரி வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர்கள், டெங்கு தடுப்பு பணியா ளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது மழைக்காலம் என்பதால், மழை நீர் உரல்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக், உடைந்த பிளாஸ்டிக் பாத்திரங்கள், மண்பாத்திரங்கள், பழைய டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண் டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. கொசு புழுக்களை ஒழிக்கும் பணிகளில், நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டெங்குவை ஒழிப்பதில் நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் உறுதுணை யாக இருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.