டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்!

வார்பட்டு கிராமத்தில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையொட்டி டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-01 04:55 GMT

டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்!

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட வார்பட்டு கிராமத்தில் பெண் ஒருவருக்கு . டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையொட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில் சுகாதாரா ஆய்வாளர்கள் உத்தமன், ராமலிங்கம்,முகேஷ் கண்ணா, வசந்த், கண்ணன், பிரேம் குமார் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் வீடு, வீடாக சென்று கொசு மருந்து அடித்தல், ஏடிஸ் கொசுப்புழுக்களை கண்டறிந்து அழித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர். மேல்நிலை குடிநீர் தொட்டியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப் பட்டது. இந்த பணிகளை மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News