சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெறலாம் : ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.;
Update: 2024-07-02 04:30 GMT
ஆட்சியர் லட்சுமிபதி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சீர்மரபின மக்கள் சமூக, பொருளாதார கல்வி நிலைகளில் மேம்பாடு அடைவதற்காக சிர்மரபினர் நல வாரியம் அமைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் ஓய்வூதியம், கண் கண்ணாடி செலவுத்தொகை, மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து ஈட்டுறுதித் தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.