வேதபுரிஸ்வரர் ஆலயத்தில் சந்திரசேகரர் புறப்பாடு
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சி;
Update: 2024-02-17 07:26 GMT
சந்திரசேகரர் புறப்பாடு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. ரத சப்தமி பிரம்மோற்சவ விழாவின் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் இன்று 8ம் நாள் காலை சந்திரசேகர சுவாமி புறப்பாடு நிகழ்வில் வேதபுரிஸ்வரர் சந்திரசேகரர் வடிவில் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார் இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.