மேட்டூரில் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை !

சேலம் மாவட்டம், மேட்டூரில் தேர்தல் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு.

Update: 2024-03-28 11:12 GMT

 தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூரில் தேர்தல் துணை வட்டாட்சியர் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டதால் பரபரப்பு. மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தவர் நர்மதா (37). இவரது கணவர் மணிகண்ட சபரி (38) மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.  இவர்களுக்கு நான்கு வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று இரவு தேர்தல் துணை வட்டாட்சியர் நர்மதா தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவர் மணிகண்ட சபரி மேட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். அப்புகாரில் தனது மனைவிக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் இதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.மன அழுத்தம் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை பிரயோத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேர்தல் நேரத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News