கலைஞர் நூற்றாண்டு விழாவில் துணை சபாநாயகர் பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு;

Update: 2024-01-09 08:56 GMT

கலைஞர் நூற்றாண்டு விழாவில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ”சட்டமன்ற நாயகர் கலைஞர்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் வெற்றிபெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் துணை சபாநாயகர் பிச்சாண்டி பரிசுகளை வழங்கி பாராட்டினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ”சட்டமன்ற நாயகர் கலைஞர்” என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கருத்தரங்கம் ஜனவரி -8ம் தேதி நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பள்ளி மாணவர்களுக்கு தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்ற கருத்தரங்கங்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப்பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழாக்குழு உறுப்பினர் ஞானசேகரன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் தெரிவித்தபோது, சட்டப்பேரவையில் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக, ஒரு கொறடாவாக, ஒரு முதலமைச்சராக என அனைத்து அங்கங்களிலும் பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள். சட்டமன்றத்தில் பல்வேறு சட்டங்களை இயற்றி எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறி உள்ளார்கள் என்றால் அதையெல்லாம் செய்தது முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அதனால்தான் அவர் சட்டமன்ற நாயகர் என அழைக்கப்படுகிறார். டாக்டர் கலைஞர் இயற்றிய திட்டங்கள் அனைத்தும் இந்தியாவையே வழிநடத்தக்கூடிய திட்டங்களாக இருந்தது. அவர் அறிவித்த அனைத்து திட்டங்களும் இந்திய மக்களின் அனைவருக்குமான திட்டங்களாக இருந்தது. எனவே எதிர்காலத்தில் சட்டமன்ற நாயகர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களைப் போல மாணவர்களாகிய நீங்களும், திறமைகளை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு மாணவர்களும் எழுச்சியோடு நாட்டின் வரலாறுகளை மற்றவர்களுக்கு சொல்லக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக வளர வேண்டும். என தெரிவித்தார். கல்லூரி மாணவர்களுக்காக போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி பூஜா, என்பவருக்கு ரூ.3000ம், இரண்டாம் பரிசுபெற்ற செல்வி லத்திகாஸ்ரீநிதி என்பவருக்கு ரூ.2,000ம், மூன்றாம் பரிசு பெற்ற செல்வி கீர்த்தனா, செல்வி ஹர்ஷவர்த்தினி, செல்வன் ஐயப்பன் ஆகிய மூன்று நபர்களுக்கு தலா ரூ.1000ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் வழங்கினார். அதேபோல, பள்ளி மாணவர்களுக்காக போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி பார்க்கவி என்பவருக்கு ரூ.3000ம், இரண்டாம் பரிசுபெற்ற செல்வி ஆதாம்கனி என்பவருக்கு ரூ.2,000ம், மூன்றாம் பரிசு பெற்ற செல்வி அஞ்சலி, செல்வி வர்ஷா, செல்வி அகல்யா ஆகிய மூன்று நபர்களுக்கு தலா ரூ.1000ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற கூடுதல் செயலாளர் சுப்ரமணியம், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சட்டமன்ற இணைச்செயலாளர் கருணாநிதி, துணைச்செயலாளர் சுமதி, சார்புச் செயலாளர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ராமலிங்கம், பெரம்பலூர் நகர்மன்ற துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News