மொடக்குறிச்சியில் lமத்திய அரசு திட்டங்கள் குறித்து விளக்கம்

மொடக்குறிச்சியில் பொதுமக்களுக்கு மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2024-01-05 10:08 GMT

உறுதிமொழி ஏற்பு 

மத்திய அரசு ஆனது மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை முன்னெடுத்து நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற திட்டத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து பகுதிகளிலும் எல்.இ.டி திரை வாயிலாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள காகம், ஈஞ்சம்பள்ளி மற்றும் குலவிளக்கு ஊராட்சிகளில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி முன்னிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்களான பாரத பிரதமரின் விவசாய கௌரவ நிதி, பாரத பிரதமரின் விவசாயிகள் பாசன திட்டம், விவசாய கடன் அட்டை உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.

இதனைத் தொடர்ந்து மண்வளத்தின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை வழி விவசாயத்தின் அவசியம் பற்றியும், டிரோன்(Drone) மூலம் மருந்து தெளிப்பின் முக்கியத்துவம் பற்றி செயல்விளக்கங்கள் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

Tags:    

Similar News