சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.

Update: 2024-06-01 03:11 GMT

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.


கிழக்கு டெல்லி பகுதியில் குழந்தைகள் மருத்துவமனையில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உடல்கருகி பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்பில் தீ விபத்து தணிக்கை மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் தீ விபத்து தடுப்பு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அப்போது அறுவை சிகிச்சை அரங்கு, தீவிர சிகிச்சை பிரிவு, சமையலறை, கியாஸ் சிலிண்டர் ஆக்சிஜன் சேமிப்பு அறை, பதிவேடுகள் அறை, மின் சாதனங்கள் ஆகியவற்றில் தீ விபத்து ஏற்பட்டால் அவற்றை எப்படி அணைத்து கட்டுப்படுத்துவது? என்பது குறித்து டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒத்திகை செய்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தீ பம்புகள், மின் வயர்கள், ஒலிபெருக்கி அறிவிப்பான், தண்ணீர் வசதி ஆகியவற்றை அடிக்கடி ஆய்வு செய்து அவைகள் சரியான முறையில் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News