சங்கரன்கோவிலில் பூச்சிவிரட்டி கரைசல் தயாரிக்கும் செய்முறை விளக்கம்
சங்கரன்கோவிலில் ஆறு இலை பூச்சிவிரட்டி கரைசல் தயாரிக்கும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில் அருகே வேளாண்மைத்துறை சார்பில், வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை முறையில் ஆறு இலை பூச்சிவிரட்டி கரைசல் தயாரிக்கும் செய்முறை விளக்கத்தோடு விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வேளண்மைதுறை சார்பில் விவசாயிகளுக்கு விவசாய பயிர்களில் உள்ள புழு, பூச்சியின் தாக்கத்தினை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கு வேப்ப இலை, ஆடுதின்னா இலை, புங்க இலை, எரிக்கஇலை, உள்ளிட்ட ஆறு வகையான,
இலைகளை கொண்டு கரைசல் செய்து பத்து நாட்கள் ஊற வைத்து அதனை பயிர்களுக்கு தெளித்தால் செலவு இல்லாமல் புழு, பூச்சிகளை விரட்டுவதற்கான ஆறு இலை கரைசல் செய்முறை விளக்கங்களோடு தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செய்து காண்பித்து எடுத்துரைத்தனர்.
இதில் வேளாண்மைத்துறையை சேர்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.