ஆதரவற்ற சிறுமி நீதிபதி உத்திரவுப்படி அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு

குமாரபாளையத்தில் ஆதரவற்ற சிறுமியை நீதிபதி உத்திரவின்படி  பொதுநல அமைப்பினர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Update: 2024-04-17 14:32 GMT

குமாரபாளையத்தில் ஆதரவற்ற சிறுமியை நீதிபதி உத்திரவின்படி  பொதுநல அமைப்பினர் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆதரவற்ற சிறுமியை  பொதுநல அமைப்பினர், நீதிபதி உத்திரவின்படி அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் இக்கிரளையைச் சேர்ந்த லட்சுமி, 29. இவரது  மகள் செந்து, 13.  a கணவரின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு, மகளுடன்  வெளியேறி தமிழகத்திற்கு வந்தவர்கள், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.  

மகளிர் காவல் நிலையத்தில் இருந்து, குமாரபாளையத்தில் உள்ள  ஒரு தனியார் காப்பகத்தில்  ஒப்படைக்கப்பட்டார்கள். அங்கும் நிம்மதி இல்லாமல், அங்கிருந்து பாசம் முதியோர் இல்லத்திற்கு வேலை கேட்டு லட்சுமி  வந்தார். விசாரித்தபோது, அவருக்கு  13 வயது மகள், முன்பிருந்த  காப்பகத்தில் இருப்பதாக தகவல் அறிந்து, உடனே பாசம் பொதுநல அமைப்பினர்  மற்றும் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து, அந்த காப்பகத்திலிருந்து, லட்சுமியின் மகள் செந்துவை மீட்டு வந்தனர்.

அடுத்த நடவடிக்கையாக பொதுநல அமைப்பைச் சேர்ந்த பள்ளிபாளையம் சமூக ஆர்வலர் கவுசல்யாவை  தொடர்பு கொண்டனர்.  நாமக்கல் சகி சேவை மைய  அதிகாரி வித்யா, பாசம் அமைப்பின்  நிறுவனர்  குமார் மற்றும் சமூக சேவகர் .கவுசல்யா ஆகியோர் பெண் குழந்தை செந்துவை,  பாதுகாப்பாக   நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிபதியின் அனுமதியுடன் நாமக்கல் குழந்தைகள் காப்பகத்தில்  அக் குழந்தையை சேர்த்தனர்.

Tags:    

Similar News