கள்ளச்சாராய ஊரல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் போலீசார் தேடுதலின் போது, கீழ்கோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 500 லிட்., சாராய ஊரல் சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.;

Update: 2023-12-16 05:20 GMT

கல்வராயன்மலை பகுதியில் போலீசார் தேடுதலின் போது, கீழ்கோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்ட 500 லிட்., சாராய ஊரல் சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராய ஊரல்களை அழித்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் IPS,. (பொறுப்பு) உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தாரணேஸ்வரி தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கீழ்கோட்டை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய ஒரு பேரலில் சுமார் 500 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 25 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News