முத்துப்பேட்டையில் வளர்ச்சி திட்ட பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

முத்துப்பேட்டை பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

Update: 2023-12-09 16:20 GMT

பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முத்துப்பேட்டை ஒன்றியம் ,ஓவர்ரூர் ஊராட்சியில் ரூபாய் 2.99 லட்சம் மதிப்பீட்டில் ஓவர்ரூர் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையினையும் ,ரூபாய் 7.49 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையலறை கட்டிடத்தினையும், ரூபாய் 2.82 லட்சம் மதிப்பீட்டில் மணிமாறன் தெருவில் 50 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையினையும், 6.20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண்களுக்காக கட்டப்பட்டு வரும் கழிவறையினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

. மேலும் ஓவர்குடி பகுதியில் மரைக்கோரையாறு, பாண்டி கிராமத்தில் உள்ள வளவனாறு, தில்லைவிளாகம் பகுதியில் உள்ள பழைய கிளை தாங்கி ஆறு ,புதிய கிளை தாங்கியாறு ஆகிய ஆறுகளில் நீர் செல்வதற்கு தடையாக படர்ந்து இருந்த வெங்காய தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது முத்துப்பேட்டை வட்டாட்சியர் மகேஷ் ,முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News