வளர்ச்சி திட்ட பணிகள் - ஆணையர் ஆய்வு
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-01-24 07:29 GMT
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, மண்ணரை மூழிக்குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அதில் முதல் கட்டமாக 350 மீட்டர் நீளத்துக்கு 8 அடி அகலத்தில் குளத்தின் ஒரு பகுதியில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். அப்போது உடன் சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி, உதவி பொறியாளர் பால் சாமி, மற்றும் வேர்கள் அமைப்பு நிர்வாகிகள் இருந்தனர்.